இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யும் பணி
விழுப்புரத்தில் வாக்கு சாவடிகளுக்கு அனுப்ப வாக்கு பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்ட பணி நடைபெற்றது;
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்கான இயந்திரங்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இரண்டாம் கட்ட (randomization ) தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடும் பணி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.