தாட்கோ மானியம் பெற கலெக்டர் அழைப்பு
விழுப்புரம் மாவட்ட தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தாட்கோ மூலம் மானியம் பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க, விவசாய பைப்லைன் அமைக்க அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் மின் மோட்டார் மற்றும் பைப் லைன் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாயும், பைப் லைன் அமைக்க 15 ஆயிரம் ரூபாயும் அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது.இம்மானிய தொகைபெற http://application.tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல், புலப்பட நகலுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாாவட் ஆட்சியரை தலைவராகக் கொண்ட தேர்வு குழுவினரால், தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவித்து ள்ளார்.