மழை - இன்று விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை எச்சரிக்கைவிடுத்துள்ளது. அதன்படி, மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.