விழுப்புரத்தில் நகராட்சி வார்டு மறுவரையரை ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2021-12-25 02:00 GMT

விழுப்புரத்தில் நடைபெற்ற நகராட்சி வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்புக்கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு மறுவரைறை ஆணையத்தின் தலைவர் முனைவர் வெ.பழனிகுமார் (ஒய்வு) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள்,பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்,செயலர் எ.சுந்தரவள்ளி, மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்/நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,  மாவட்ட கலெக்டர்கள் விழுப்புரம் த.மோகன், கடலூர்  கே.பாலசுப்பிரமணியம், கள்ளக்குறிச்சி என்.ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News