விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆய்வு
விழுப்புரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (03.11.2021) நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.