விழுப்புரத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆலோசனை நடத்தினார்;
இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்கணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார்,விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.