அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை நிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்

Update: 2022-08-14 16:11 GMT

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 4-வது மாநாடு விழுப்புரம் மாவட்ட சிஐடியு மாவட்ட குழு அலுவலக கூட்டரங்கில் ஆகஸ்ட் 14ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஆர்.பிரேமா தலைமை தாங்கினார், முன்னதாக மாவட்ட பொருளாளர் ஆர்.ராமதிலகம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஆர்.மலர்விழி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்,

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி கலந்துகொண்டு மாநாட்டில் நிறைவுறையாற்றினார். மாநாட்டில் முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்கள் ஆக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாநாட்டில் இதுவரை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த நிலையில் இந்த மாநாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,

மாநாட்டில்  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், முடிவில் எஸ்.லட்சுமி நன்றி உரையாற்றினார்.

Tags:    

Similar News