விழுப்புரம் மாவட்டத்தில் நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் கடன் வழங்குவதற்கான நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியிட்டனர்.;
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 2022-2023 ஆண்டுகளில் கடன் வழங்க கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கி சார்பாக 2022 2023ஆம் ஆண்டிற்கு ரூ.6802.32 கோடி வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் த.மோகன் வெளியிட்டார்.
அருகில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பூ.காஞ்சனா. வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், நபார்டு வங்கியின் விழுப்புரம் மாவட்ட உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) ரவிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. தாமோதரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.