யாசகம் எடுத்த முதியவர்களுக்கு மறுவாழ்வு

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில், யாசகம் எடுத்து வந்த முதியவர்களுக்கு மறுவாழ்வாக, ஆதரவற்ற இல்லத்தில் போலீசார் சேர்க்கப்பட்டனர்.

Update: 2022-12-05 01:03 GMT

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில், யாசகம் எடுத்து வந்த முதியவர்களுக்கு மீட்ட  போலீசார்.

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகள் மற்றும் அப்பகுதி வளாகத்தில் ஆதரவற்ற முதியவர்கள் பலர், யாசகம் எடுத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வருகின்றனர். அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில், விழுப்புரம் ரயில்வே போலீசார் மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த சேலம் ஆட்டியாம்பட்டியை சேர்ந்த பூபதி, விழுப்புரம் ஊரல் தெருவை சேர்ந்த பழனி, சித்தேரிக்கரை மஜித், மதுரை காலவாசல் பகுதியை சேர்ந்த ரவிபிரகாஷ், விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவை சேர்ந்த காசிலிங்கம் ஆகிய 5 பேரை ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜன், போலீசார் சாமுண்டீஸ்வரி, இளையராணி, சுதா, வீரபாலன் உள்ளிட்டோர் மீட்டனர்.

பின்னர் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 5 பேரையும் குளிக்க வைத்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் வாங்கிக்கொடுத்து, உணவு வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் 5 பேரையும், விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள முதியோர் இல்லத்தில், தங்க வைத்து பராமரிக்க போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோன்று தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள், கோவில்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து இடங்களிலும் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் மீது அரசு, அவ்வப்போது கரிசனம் காட்டினாலும் அவர்களின் வாழ்வாதாரம் மாற்றப்படவில்லை அதனால் அரசு இனிமேலாவது இது மாதிரி ஆதரவற்றோர், யாசகம் எடுப்பவர்கள் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பு இல்லங்களில் அனுமதித்து பராமரிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுபடி 'ஆபரேசன் மறுவாழ்வு' என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில் இதுபோன்ற ஆதரவற்று திரியும் முதியோரை மீட்கும் பணியை போலீசார் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் ரயில்வே சந்திப்பில் ரயில்வே போலீசார் இந்த நடவடிக்கை எடுத்து அங்கிருந்த முதியவர்களை காப்பாற்றி முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த செயல், விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி அனைவராலும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாதிரியான செயல்களை நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மற்றும் கோயில்கள் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் சம்பந்தப்பட்ட துறையினர் தனிக் கவனம் செலுத்தி யாசகம் எடுக்கும் முதியோர்களை காப்பாற்றி இல்லங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை கூடுதலாக செய்ய வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தால் இவர்களின் வாழ்க்கையில் மறுவாழ்வு ஏற்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் மௌனமாக கருத்து தெரிவிப்பதோடு இது மாதிரி செயல்களை வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

Similar News