விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாகக் குறைந்து வரும் கொரோனா தொற்று

கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உச்சத்தை தொட்ட கொரோனா படிப்படியாக வேகமாக குறைந்து வருகிறது.

Update: 2022-02-05 16:42 GMT

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 94 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 54,081 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மட்டும் 406 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 51,352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2323 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேகமாக ஏறு முகத்தில் உச்சம் தொட்டு வந்த கொரோனா இரண்டு நாட்களாக மிக வேகமாக இறங்குமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News