ரயில்வே பள்ளி மூடப்படுவதை தடுக்க வேண்டும் என சிபிஐ எம்எல் கட்சி கோரிக்கை

விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ரயில்வே பள்ளி மூடப்படும் முடிவை திரும்ப பெற வேண்டும் என சிபிஐ எம்எல் கட்சி கோரிக்கை

Update: 2021-07-20 12:14 GMT

விழுப்புரம் ரயில்வே பள்ளி மூடப்படுவதை தடுக்கக் கோரி கலெக்டரிடம் சிபிஐ எம்எல் கட்சி மனு

விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செயல்படும் ரயில்வே பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட ஆன்லைன் வகுப்பு தொடங்க வேண்டும், மேலும் ரயில்வே பள்ளி மூடப்பட போவதாக தகவல்கள் பரவி வருகிறது, அதனால் பள்ளி மூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஐ எம்எல் கட்சி கோரிக்கை மனு அளித்தது. 

கட்சியின் மாவட்ட செயலாளர் எம் . வெங்கடேசன் தலைமையில் பள்ளி மாணவ,மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து இந்த  கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News