விழுப்புரத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் குறைதீர்ப்பு முகாம் 9 வட்டங்களில் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்ட பொது வினியோகத் திட்ட சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், மரக்காணம், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய 9 வட்டங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் இளங்கோவன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றார். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று மனுவும் அளிக்கப்பட்டது. இதில் தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.