விழுப்புரத்தில் டூவீலருக்கு இறுதிச்சடங்கு செய்த வாலிபர் சங்கத்தினர்

விழுப்புரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி டூவிலருக்கு வாலிபர் சங்கத்தினர் இறுதி சடங்கு செய்தனர்.

Update: 2021-06-23 15:45 GMT

விழுப்புரத்தில் டூவீலருக்கு இறுதிச்சடங்கு செய்த வாலிபர் சங்கத்தினர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில், மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் பேசினார். மாவட்ட பொருளாளர் , மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய  அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் டூவீலருக்கு மாலை அணிவித்து, இறந்தவர்களுக்கு கொள்ளி வைக்கும் விதமாக கொள்ளி குடம் எடுத்து வந்து உடைத்து இறுதி சடங்கு செய்தனர், இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நின்று பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News