விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா தீவிர பரவலை கட்டுப்படுத்த போலீஸ் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளித்தனர்.;
விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கொரோனா தீவிர பரவலை தொடர்ந்து கொரானாவை கட்டுபடுத்த சனிக்கிழமை நகராட்சியின் சென்னை திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போலீஸ் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம் மூலம் கிருமிநாசினி மருந்துகள் தெளித்தனர்.