குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் பெண் காவலர்கள் வளவனூர் பகுதிகளில் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான, இலவச அழைப்பு எண் 181 மற்றும் 1098, குழந்தை தொழிலாளர்களை ஒழித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.