விழுப்புரத்தில் பிளஸ் டூ மாணவி கடத்தல்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவியை இன்று கடத்திச் சென்றதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-08-14 16:14 GMT

பிளஸ் டூ மாணவி கடத்தல் 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று அம்மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருந்தவரை திடீரென காணவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்கள் மகளை, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மகனான இருசக்கர வாகன மெக்கானிக் விஜய் (21) என்பவர் ஆசைவார்த்தை சொல்லி  கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற விஜய் என்பவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News