மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நகராட்சி குடிநீர் வேண்டும்: மக்கள் கோரிக்கை

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் வழியாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து நகருக்கு குடிநீர் சென்றாலும், அங்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை

Update: 2021-09-04 06:17 GMT

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம்

விழுப்புரம் நகரத்தில் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் சார்பில் வாட்ஸ்அப்பில் ஒரு கோரிக்கை மனு வேகமாக வைரலாகி வருகிறது, மாவட்ட ஆட்சியருக்கு  அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின்  பணிவான வேண்டுகோள் என தொடங்கும் அந்த செய்தியில்,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தினசரி காலை, மாலை என நூற்றுக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு அவசர தேவைக்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமடைந்து வருகின்றனர்.  இந்த வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நூலகம், தொழில் பயிற்சி மையம், வேலைவாய்ப்பு மையம், விளையாட்டு மைதானம், இசேவை மையம் உட்பட பல்வேறு மாவட்ட தலைமை அலுவலங்கள் இருப்பதால் இங்கு தினசரி நூற்றுக்கணக்கில் பொது மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கிறனர்.

குறிப்பாக இதில் மாணவர்கள் இங்கு உள்ள மைதானத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை தினந்தோறும் விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு அத்தியாவசியத்திற்கு  குடிக்க கூட இந்த வளாாகத்தில் குடிநீர் இல்லை. அதேபோல் இங்கு உள்ள அனைத்து அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கும், அங்கு தினந்தோறும் வந்து செல்லும் பொதுமக்கள், மாணவர்கள்,அரசு ஊழியர்கள் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

நகராட்சி குடிநீர் பைப் லைன் இதன் வழியே சென்றாலும். இதுவரை நகராட்சி குடி நீர் இல்லாத நிலை உள்ளது, பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள இந்த அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றி தரவேண்டும் என  வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளனர்,

Tags:    

Similar News