கழிவுநீரை அகற்றி தார்சாலை அமைக்க கோரிக்கை
விழுப்புரம் கணேஷ் நகரில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றி உடனடியாக தார்சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விழுப்புரம் நகராட்சி பகுதியை சேர்ந்த கணேஷ் நகர் 4,வது குறுக்கு தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சிக்கு அனைத்து வரிகளையும் கட்டி வந்தாலும், அப்பகுதி தெருவில் எந்த அடிப்படை வசதிகளையும், நகராட்சி செய்து தரவில்லை,
தார் சாலை அமைத்து தரக்கோரி வேண்டி நகராட்சி ஆணையருக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, இப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும். பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டி மூடாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவு நீர்,மழைநீர் தேங்கி உள்ளதை உடனடியாக சரி செய்து தார்சாலை அமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.