விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாசுக்கு சிலை அமைக்க கோரி மனு

விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாஸுக்கு சிலை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.;

Update: 2022-07-12 08:45 GMT

தியாகி விஸ்வநாத தாசுக்கு சிலை அமைக்க கோரி மனு கொடுக்க வந்தனர்.

மருத்துவர் சமுதாயத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் சுதந்திர போராட்டதிற்காக 22 முறை சிறை சென்றுள்ளார். நமது நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல தியாகிளுக்கு உருவ சிலைகள் தமிழ்நாட்டில் எல்லா நகரங்களிலும் அமைத்துள்ளனர். ஆனால் தியாகி விஸ்வநாதாஸ் சிலை எங்கும் இல்லை. அதனால் விழுப்புரம் நகரத்தில் ஒரு அமைப்பான பகுதியில் அவருடைய சிலை அமைக்க வேண்டும் என வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் கோரிக்கை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் மனு அளித்தனர். 

Tags:    

Similar News