விழுப்புரத்தில் ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு

Petition of Agricultural Workers Union to the Collector at Villupuram;

Update: 2022-06-21 03:15 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர்

சுடுகாட்டு பாதையை மறித்து இரும்பு கேட் அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட நாயனூர் கிராமத்தில் சுமார் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், அக்கிராம மக்கள் காலங்காலமாக இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் உடல்களை எடுத்து செல்ல பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதை (ஓடை புறம்போக்கு) மற்றும் விவசாயிகள் பாதையை குறுக்கே மறித்து அது தங்கள் இடம் என கூறி அடாவடித்தனமாக அந்த பாதையை ஆக்ரமிப்பு செய்து, அந்த பாதையை இடைமறித்து இரும்பாலான கேட் அமைத்து பூட்ட்டால் பூட்டி வைத்து உள்ளார்.

 இது பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, இது குறித்து அக்கிராம மக்கள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர், இது குறித்து கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் பொது சுடுகாட்டு பாதையை ஆக்ரமித்துள்ள தனி நபர்களான கோபி,சரன், மற்றும் அந்த கிராம பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து கடந்த 29.06.2021 அன்று சமாதான அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது கேட்டை அப்புறப்படுத்திட சம்மதித்து 15 நாள் அவகாசம் கேட்டு அதற்கு இரு தரப்பினரும் சம்மதித்து, எழுத்து பூர்வமாக ஒப்பந்த உறுதி மொழியுடன் கையெழுத்து போட்டு விட்டு வந்தார்கள்.

ஆனால் இன்று வரை கடந்த 8 மாதகாலமாக அந்த கேட்டை அகற்றாமல் பிடிவாதமாக உள்ளனர், இதனால் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லுவதில் பெரிதும் பாதிக்கப்பட்டு, சிரமமடைந்து வருகின்றனர், ஆனால் பல ஆண்டுகளாக புகைந்து வரும் இந்த பிரச்சனையில் தொடர்ந்து அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருந்து வந்தனர், மேலும் பிரச்சனை ஏற்படும் போது மட்டும் இரு தரப்பினரையும் அழைத்து சம்பிரதாய கடமை ஆற்றுவது, அதன் பிறகு கிணற்றில் போட்ட கல் மாதிரி இருந்து, இந்த பிரச்சனையை தீர்க்காமல் பிரச்சனையில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதால், அந்த சுடுகாட்டு பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபர் மீண்டும், மீண்டும் சுடுகாட்டுப் பொது வழி பாதையை வழிமறித்து பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

உடனடியாக அந்த சுடுகாட்டுப் பாதையை மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக வலியுறுத்தி வருகிறது, இந்நிலையில் இந்த சுடுகாட்டிற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பொது பாதை முழுமையாக ஆக்ரமிப்பு செய்து பயிர் செய்து வந்தனர், கிராமத்தில் இறந்தவர்கள் உடலை அந்த பயிர்களிடையே சுமந்து சென்று புதைத்தும், எரித்தும் வந்தனர், அன்றைய அவல நிலையை எதித்து கம்யூனிஸ்ட்கள் கடந்த 1994 முதல் 1995 வரை சுடுகாட்டு பாதை கேட்டு போராடி அதன் விளைவாக ஓடை புறம்போக்கு சுடுகாட்டு பொது பாதை மீட்கப்பட்டு, தற்காலிகமாக பாதையை கிராம பொது மக்கள் ஒன்று கூடி சரி செய்து பாதையாக மாற்றினர்.

தொடர்ந்து அரசு அந்த பாதையில் சுமார் 1000 மீட்டர் சிமெண்ட் சாலை அமைத்து கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது, சுடுகாட்டு பாதை அமைத்து கொடுக்கப்பட்டது. அதிலிருந்து சுமார் 30 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தனர், அந்த பாதையில் விவசாயிகளும் வண்டி ஓட்டி செல்லவும், விளையும் பொருளை எடுத்து வரவும், ஆடு, மாடுகள் சென்று வரவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தான் மீண்டும் அந்த பாதையை ஏற்கனவே ஆக்ரமிப்பு செய்திருந்த நாயனூர் கிராமத்தைச் சேர்ந்த 1. கோபி, 2. சரத் ஆகிய இவர்கள் தங்களுக்கு தான் சொந்தம் என்று மீண்டும் பொதுபாதையை மறித்து இரும்பு கேட் போட்டு விட்டனர், பூட்டு போட்டது மட்டுமின்றி பொது பாதையில் சில இடங்களில் கால்வாய் போல் பள்ளம் தோண்டி மக்கள் போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி விட்டனர், ஒரு சிலர் கிராமத்தையும் இரண்டாக பிரித்து, இந்த பிரச்னையில் பொது மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

அதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, ஆனால் கடந்த 29.06.2021 முதற்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 31.07.2021 அன்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் 15 நாட்களுக்குள் அந்த இரும்பு கேட்டை அப்புறப்படுத்தி கொடுப்பதாக எழுத்து மூலம் எழுதிக் கொடுத்து விட்டு வந்தனர். ஆனால் இதுவரை அந்த இரும்பு கேட் அகற்றப்படாமல் இருந்து வருகிறது,

இந்நிலையில் அங்கு பொது மக்களிடையே அமைதி ஏற்படுத்தும் வகையிலும், பிரச்சினைக்கு சமூகமான தீர்வு கேட்டும், பூட்டிய இரும்பு கேட்டை அப்புறப்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலைமையில்   சிபிஎம்கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன்,விதொச மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன், வட்ட தலைவர் ஏ.ஏழுமலை, துணைச்செயலாளர்கள் எம்.செல்வராஜ், செங்கேணி, துணைத்தலைவர்கள் பாபு, முருகேசன், கே.ஏழுமலை உட்பட 20 க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டு பாதையை, விவசாயிகள் பயன்படுத்தி வரும் பொதுநடைவழிப்பாதையில் போடப்பட்டுள்ள இரும்பு கேட் மற்றும் பூட்டை அப்புறப்படுத்தி பாதை மீட்டு தந்து பொதுமக்களின் நலனை பாதுகாத்திட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர்.

Tags:    

Similar News