கூட்டுறவு வங்கியில் பண மோசடி ஆட்சியரிடம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் சின்னத்தச்சூர் கூட்டுறவு வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

Update: 2022-12-04 15:00 GMT

கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் குறித்து  ஆட்சியர் எஸ்பியிடம் புகார் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம், சின்னதச்சூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலங்களில் புகார் தொிவித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்டது தெ.புதுப்பாளையம். இப்பகுதியை சேர்ந்த வள்ளி, வீரம்மாள், சாந்தி, சந்திரா, தண்டபாணி, விநாயகம், வெங்கடேசன் ஆகியோர்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலங்களில் அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவிவரம்:  நாங்கள் 7 பேரும் சின்னதச்சூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் எங்களது கணக்கில் வரவு வைப்பதற்காக அங்கு பணிபுரியும் ஒருவர் மூலம் பணம் செலுத்தினோம். நாங்கள் செலுத்திய மொத்த தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரமாகும். இதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. இந்நிலையில் எங்களது கணக்கிலுள்ள தொகையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் எடுக்க சென்ற போது, உங்களது கணக்கில் பணம் இல்லை என அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக கணக்காளரிடம் கேளுங்கள் எனக் கூறிவிட்டார். எனவே கூட்டுறவு கடன் சங்கத்தில் நாங்கள் செலுத்திய பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கள் பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் இது மாதிரியான முறைகேடுகள் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் படிப்பறிவு இல்லாத, புரிதல் இல்லாத ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாயிகள் அதனால் அவர்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் அரசியல் மற்றும் தனிப்பட்ட பின்புலம் உள்ளவர்களின் தலைமையில் செயல்படுவதால் அங்கு பல்வேறு முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனை கண்காணிக்க வேண்டிய அரசுகளோ சமீபகாலமாக கண்காணிக்க தவறி விட்டு அரசியல் காய் நகர்த்தலுக்காக ஒருவரை ஒருவர் அவ்வப்போது குற்றம் சாட்டிக் கொள்வதோடு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகளில் அரசியல் பின்புலத்தில் கூட்டுறவு வங்கியின் தலைவராக வருபவர்கள். அந்தந்த வங்கிகளை  நலிவடையச் செய்து  தி வருகின்றனர்.

இதனால் கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சியை நோக்கி போவதற்கு பதிலாக பின்னோக்கி செல்கிறது. இதனை முன்னோக்கி செல் எடுத்துச் செல்ல வேண்டியதில்  அரசு  அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் உடனடியாக கூட்டுறவு வங்கிகளை தணிக்க செய்வதோடு, வங்கியில் கணக்கு வைத்திருப்போரின் இருப்புகளையும் கணக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின்  கோரிக்கையாக உள்ளது. 

Tags:    

Similar News