மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவர் கைது

Today Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-09-13 03:20 GMT

காட்சி படம் 

Today Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,காணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பழப்பட்டு பள்ளிக்கூட தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் காணை காவல் உதவி ஆய்வாளர்  பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 28) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணதாசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 32 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News