விழுப்புரத்தில் திடீரென சாய்ந்த மின் கம்பம்
விழுப்புரத்தில் திடீரென சாய்ந்த மின் கம்பம் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனே சரி செய்ய கோரிக்கை;
சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மின் கம்பம் ஒன்று திடீரென உடைந்து சாய்ந்து உள்ளது.
இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லுகின்றனர். எனவே, உடனடியாக கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.