அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2021-12-27 15:19 GMT

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எம்.பழமலை தலைமை தாங்கினார்,ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ஜி.ராமச்சந்திரன் பொருளாளர் பி.சேசையன், துணை செயலாளர் ஏ.சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த 2015 முதல் உயர்த்தாமல் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி வழங்க வேண்டும், 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைய வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்,

ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் பலராமன் கலியமூர்த்தி,சின்னராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News