ஓய்வூதியர்கள் நேர்காணல்: ஆட்சியர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு..
Nerkanal in Tamil-ஓய்வூதியர்கள் நேர்காணல்: ஆட்சியர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு..;
ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
Nerkanal in Tamil-இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விழுப்புரம் மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர நேர்காணல் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு நேரில் 1.7.2022 முதல் 30.9.2022 வரை ஆஜராகி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் இந்திய தபால் துறை வங்கியின் மூலம் தங்களின் நேர்காணலை பதிவு செய்யலாம். பதிவு கட்டணம் ரூ.70 செலுத்தப்பட வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2