விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிட கட்டண கொள்ளை
விழுப்புரம் நகரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
விழுப்புரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடம் உள்ளது, அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு அரசு 3 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், வாகன நிறுத்துமிடத்தில் 10 ரூபாய் வசூலிக்கின்றனர். மேலும் இரண்டாவது நாள் வாகனங்கள் எடுக்க சென்றால் கூடுதலாக 20 ரூபாய் வசூலிக்கின்றனர். அவ்வாறு அதிக தொகை வசூலித்தாலும், அதற்கு ரசீது தருவதில்லை.
இது குறித்து கேட்டாலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். எனவே இந்த கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.