கொரோனா நிவாரண நிதி வழங்க மக்களை அலையவிடும் அதிகாரிகள்

விழுப்புரத்தில் உள்ள ஒரு சில ரேசன் கடைகளில் கொரோனா நிதியுதவி டோக்கன்களை பெற கடைகளுக்கு அலையவிடுவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2021-05-11 11:07 GMT

கோப்பு படம்

வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை நேரில் வந்து டோக்கனை பெற்று செல்லுமாறு அலுவலர்கள் கூறுகிறார்கள்.

அப்படி செல்லும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்து அதில் ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி விட்டு மற்றவர்களை நாளைக்கு வருமாறு கூறுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர், இதனால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவுப்படி வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News