இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டோம்: அமமுக வேட்பாளர்

திமுக-அதிமுக வை போன்று இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டோம் -அமமுக வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம் .;

Update: 2021-03-22 17:13 GMT

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் குடுமியான் குப்பத்தில், அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில் பத்து ஆண்டுகளாக, விழுப்புரம் எம்.எல்.ஏ. இந்த பகுதிக்கு வந்தாரா என்று தெரியவில்லை. எனக்கு ஓட்டுப் போட்டால், தொகுதியில் உள்ள மக்களின் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். தி.மு.க.,-அ.தி.மு.க.,வை போன்று இலவசங்கள் கொடுத்து நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம், மேலும் அ.ம.மு.க.,வை ஆதரித்து வாக்களித்தால், மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என வேட்பாளர் பாலசுந்தரம் பேசினார்.

Tags:    

Similar News