அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் பலர் டூவீலர், கார்களில் பயணத்தை தொடர்ந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்டங்கை, கடந்த 6 ந்தேதி முதல் அமல்படுத்திய, மாவட்ட கலெக்டர் மோகன், எஸ்.பி ஸ்ரீ நாதா ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் நகரத்தில் போலீசார் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதை பொருட்படுத்தாமல், பொதுமக்களில் சிலர் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கொண்டு, டூவீலர் மற்றும் கார்களில் சென்று வந்ததை பார்க்க முடிந்தது.அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அரசு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என்பதை, பொதுமக்கள் உணர வேண்டும்.