விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் கொண்டாட்டம்
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.;
விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்டதின் துவக்க நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்,முனைவர்.கே. சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இங்கு நடைபெற்ற கருத்தரங்கில் முட்டத்தூர், ஒய்க்காப் மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், விழுப்புரம் ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனருமான முனைவர்.ம.பாபுசெல்வதுரை கலந்து கொண்டு நாட்டு நலப்பணி திட்டத்தில்
கல்லூரி மாணவர்களின் தன்னலமற்ற களப்பணிக்கான தேவைகள் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினர்.அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி பேரிடர் கால நண்பர்கள் என்ற பேரிடர் பயிற்சி பெரும் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான முனைவர்கள் கே.பிரகாஷ்,வி.விஜயரங்கம்,ஏ.வெங்கடேசன், எஸ்.சுடர்கொடி, எஸ்.தனம், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர். முனைவர். குணசேகரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.