விழுப்புரத்தில் என் குப்பை என் பொறுப்பு திட்டம்: ஆட்சியர் ஆலோசனை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என் குப்பை என் பொறுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.;
விழுப்புரத்தில் என் குப்பை என் பொறுப்பு திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் "என் குப்பை - என் பொறுப்பு" தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித்,மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் திருமதி.தமிழ்ச்செல்வி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.