கொரோனா வார்டுகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் உள்ள நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளை பார்வையிட்டு எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் இன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனை வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சரி செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் நகரத்தில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்,