விழுப்புரம் நகரத்தில் அடிப்பட்டு கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்எல்ஏ லட்சுமணன்

விழுப்புரம் நகரத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் நேருஜி சாலையில் அடிப்பட்டு கிடந்தவரை, அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ டாக்டர். லட்சுமணன் பார்த்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்தார்.;

Update: 2021-06-27 03:33 GMT

விழுப்புரம் எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் 

விபத்தில் அடிப்பட்டு கிடந்தவருக்கு எம்எல்ஏ உதவி செய்தார். 

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் டாக்டர்.லட்சுமணன், இவர் நேற்று இரவு விழுப்புரம் நகரத்தில் நேருஜி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலையில் ரயில் நிலையம் அருகே ஒருவர் அடிப்பட்டு கிடந்தார், உடனடியாக அதை பார்த்தவர் அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ் வரவைத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News