விழுப்புரம் அருகே காணாமல் போனவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே காணாமல் போனவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.;

Update: 2022-01-25 15:00 GMT

காணாமல் போய் பிணமாக மீட்கப்பட்ட முத்தம்மாள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது துலுக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 58,  திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார்,

அவரை எங்கு  தேடியும் கிடைக்காத நிலையில்,  இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதே கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார், தகவலறிந்து விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகைக்காக யாராவது கொலை செய்து உள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர், அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News