முன்னாள் முதல்வர் கருணாநிதி விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

விழுப்புரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவி வழங்கினர்;

Update: 2022-06-04 10:30 GMT

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினர். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினர். 

இதில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா். 

Tags:    

Similar News