தடுப்பூசி போடுவதில் விழுப்புரம் தொடர்ந்து இரண்டாம் இடம்: அமைச்சர் பாராட்டு

தடுப்பூசி போடுவதில் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதற்கு அமைச்சர் பொன்முடி பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2022-01-04 16:40 GMT

வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு புத்தகம் பரிசளிக்கும் அமைச்சர் பொன்முடி 

தொடர்ந்து ஐந்து வாரங்களாக நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.

அதனையொட்டி, மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர்களை பாராட்டி  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புத்தகம் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,  உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News