2 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க, அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் 2 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.

Update: 2023-03-27 00:54 GMT

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில், 2 லட்சம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் டாக்டர் இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் கம்பன், வேங்கடபதி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், தயா.இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படத்துடன் கூடிய பட்டியலை வழங்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு கிளைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளவாறு உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தி விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக 2 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்த இக்கூட்டத்தில், வருகிற ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். அன்றைய தினம் திருவாரூரில் நடைபெறும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, முருகன், வேம்பிரவி, பிரபாகரன், முருகவேல், நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, மாவட்ட அணி நிர்வாகிகள் தினகரன், ஸ்ரீவினோத், கபாலி, நகர பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர் புருஷோத்தமன், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News