புதிய பேருந்து தடத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே புதிய பேருந்து தடத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், அருங்குறுக்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் அருங்குறுக்கை முதல் விழுப்புரம் வரையிலான புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி இன்று கொடியைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் த.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.