மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.25,000-த்திற்கான திருமண நிதியுதவி காசோலையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு இன்று (09.12.2021) வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உட்பட பலர் உடனிருந்தனா்.