விழுப்புரம் நகராட்சி 1வது வார்டில் மதிமுக வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 1 வது வார்டில் மதிமுக வேட்பாளர் ஜானகிராஜா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

Update: 2022-02-04 13:32 GMT

மதிமுக சார்பில் இன்று நகர செயலாளர் ஜானகிராஜா  வேட்புமனுவை தாக்கல் செய்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன, அதில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சிக்கு 1 வது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது,

அதில் மதிமுக சார்பில் இன்று நகர செயலாளர் ஜானகிராஜா வேட்பாளராக போட்டியிட விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.அப்போது மாவட்ட செயலாளர் பாபு கோவிந்தராஜ் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News