விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் விவசாய விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது;
வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து கருப்புகொடி ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஆர்.மூர்த்தி, ஏ.சங்கரன், சே.அறிவழகன் மற்றும் விழுப்புரம் வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், நகர செயலாளர் கே.மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.