மாவட்ட ஆட்சியரிடம் மயிலம் எம்எல்ஏ கோரிக்கை மனு
Villupuram Collector -மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு அளித்தார்.;
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த மயிலம் எம்எல்ஏ
Villupuram Collector -தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதியில் உள்ள தீர்க்கப்படாத 10 பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகளான ரெட்டனையில் தீயணைப்பு நிலையம் அமைப்பது, வல்லத்தில் காவல் நிலையம் அமைப்பது, மயிலத்தை புதிய தாலுகாவாக அறிவிப்பது, வீடூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியர் மோகனிடம் வழங்கினார் அப்போது பலருடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2