சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம்: தொல். திருமா
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார் அப்போது சனாதன சக்கிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.;
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சாதிகள் ஓபிசி, பட்டியல், பழங்குடி என்ற பெயராலே எண்ணிக்கை பலம் கொண்ட ஒரு பிரிவினராக வளர்ந்து விடக்கூடாது,
எப்போதும் அவர்கள் சாதி உணர்வோடு இருக்க வேண்டும், அப்போதுதான் மத உணர்வு மேலோங்கும் என்ற உத்தியை பயன்படுத்தி மத உணர்வை வளர்ப்பதற்காக சாதி உணர்வை தூண்டுகிறது பிஜேபி,
சாதி உணர்வு அடிப்படையில் இந்த சமூகத்தை பிளவுபடுத்தியும், மத உணர்வு அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்தியும் இந்த சமூக பிளவு, பிரிவினைவாதமும் பாஜக, சங்பரிவாரத்தின் உயிர்மூச்சு கொள்கையாகும்,
இது மிகவும் ஆபத்தானது வடமாநிலங்களில் இந்த சமூக ஆபத்தானது எந்நேரமும் நிலவுகிறது, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய அரசியல் செய்ய முயன்றும் இயலவில்லை, அதற்குக் காரணம் இங்கு செல்வாக்கு மிகுந்த கலைஞர்,ஜெயலலிதா என்ற இரு புறமும் எதிரெதிரே இரு துருவங்கள் இருந்ததால் அவர்களால் நுழையவும், காலூனறவும் முடியவில்லை,
மதசார்பற்ற திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளின் ஒரே ஒற்றை நோக்கம் மதவாத அரசியலுக்கு இந்த மண்ணில் இடமில்லை, அவர்களை ஆள விடக்கூடாது, விரட்டி அடிக்க வேண்டும், அந்த கூட்டணி சனாதான பெருமுதலாளிகளின் கூட்டணி பாசிசத்தை விரட்டி அடிப்போம், சமூக நீதியை மீட்டெடுப்போம், பெரும் முதலாளிகளின் காவலனாக பிஜேபி இருக்கிறது, இங்கு நீர்த்து போன அதிமுக அதனை தலைமை தாங்குகிறது, இங்கு அதிமுகவை வீழ்த்துவது முக்கியமில்லை, பிஜேபியை வீழ்த்த வேண்டும்,
பிஜேபியை அம்பலப்படுத்த வேண்டும்,அதிமுக அணியை அனுமதிக்கக்கூடாது, விரட்டி அடிக்க வேண்டும் அதன் மூலம் சமூக நீதி, ஜனநாயகம் காக்கப்படும், சமூக ஜனநாயகம் சமத்துவம் நிலைநாட்டப்படும் இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க தான் நாங்கள் 15 உறுதி மொழிகளை கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்,
அப்போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், மாவட்ட செயலாளர் சு.ஆட்டலரசு உட்பட பலர் உடனிருந்தனா்.தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.