விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொய் செய்திக்கு கண்டனம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கொங்கு நாடு பிரிப்பு பொய் செய்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update: 2021-07-13 15:50 GMT

இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர், அதில் மத்திய அரசு அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் தமிழகத்தில் பிரிவினையையும், பதட்டத்தையும் தூண்டும் வகையில் கடந்த 10 ந்தேதி தமிழகத்தில் இருந்து கொங்குநாடு தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கபடவுள்ளதாக பொய் செய்தியை தினமலர் செய்தி வெளிட்டுள்ளது,

இதனை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, மேலும் இது மாதிரி பிரிவினை செய்தி வெளியிட்டு தமிழகத்தில் சாதி மோதலை உருவாக்கி, தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தடை செய்யவேண்டும், அதன் ஆசிரியரை கைது செய்யவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News