மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மோடி அரசின் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு அரசியல் ஆகியவற்றை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம், சிபிஐ ,விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கடைவதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சு.ஆற்றலரசு ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை உடனடியாக கைவிட்டு, விலை உயர்வை மொத்தமாக திரும்பப் பெறவேண்டும், பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிட வேண்டும், வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 வழங்கவேண்டும்.
ஊரக வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், நகர்ப்புற வேலை உறுதிசட்டம் கொண்டு வந்துவிடவேண்டும், வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும், வேலையில்லா கால நிவாரணம் அளிக்க மத்திய சட்டம் நிறைவேற்ற வேண்டும்,அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வு வேலையின்மை வெறுப்பு அரசியலை கடைபிடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பேசினர்.
இதேபோன்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஆர் கண்ணப்பன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, திருவெண்ணெய்நல்லூரில் வட்ட செயலாளர் கே சிவகுமார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா, கண்டாச்சிபுரம் வட்ட செயலாளர் எஸ் கணபதி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், விக்கிரவாண்டியில் ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்ட செயற்குழு ஏ.சங்கரன், மயிலத்தில் ஒன்றிய செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமையில் மாவட்ட செயற்குழு ஜி.ராஜேந்திரன்,
வானூரில் வட்ட செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் மாவட்ட செயற்குழு எஸ்.முத்துகுமரன், மரக்காணத்தில் வட்ட செயலாளர் டி.ராமதாஸ் தலைமையில் மேல்மலையனூரில் வட்ட செயலாளர் டி.முருகன் தலைமையில் மாவட்ட செயற்குழு வி.ராதாகிருஷ்ணன், செஞ்சியில் வட்ட செயலாளர் ஏ.சகாதேவன் தலைமையில் மாவட்ட செயற்குழு சு.வேல்மாறன் மற்றும் சிபிஐ, விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசை கண்டடித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.