விழுப்புரம் நீதிமன்றம் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் வழக்கறிஞர்

விழுப்புரம் நீதிமன்றம் முன் வழக்கறிஞர் ஒருவர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-20 14:40 GMT

விழுப்புரம் நீதிமன்ற நுழைவுவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் விஜயகுமார்.

விழுப்புரம் நீதிமன்றம் முன்பு நீதிமன்றங்களில் நேரடி வழக்கு நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரணா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை நேரடியாக நடத்தாமல் ஆன்லைன் மூலமே நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்து, வழக்கு விசாரணைகள் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நீதிமன்றத்தின் நுழைவாயில் முன்பு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் சமூக இடைவெளியோடு வழக்குகளை நேரடியாக நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் தொழிலை கௌரவமாக நடத்த வேண்டும் என பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக விரைந்து வந்த வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News