சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரானா விழிப்புணர்வு
விழுப்புரத்தில், சட்டக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.;
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், புதன்கிழமை அன்று விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமையில் கொரானா விழிப்புணர்வு பேரணி மற்றும் 2000 மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணண் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, 2 ஆயிரம் மாஸ்க் மற்றும்2 ஆயிரத்து 500 கொரானா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.