விழுப்புரத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
விழுப்புரத்தில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.;
விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா.இலட்சுமணன், நா.புகழேந்தி, ச.சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.