திமுக வேட்பாளருக்கு கனிமொழி வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் லட்சுமணனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் கனிமொழி ஈடுபட்டார்.;
விழுப்புரம்ம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் லக்ஷ்மணனை ஆதரித்து கோலியனூர் கூட்டு ரோட்டில் திமுக மகளிர் அணி செயலாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மதுரையில் அறிவித்து அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வருவது உறுதி எனவும் திமுக ஆட்சிக்கு வந்தால் 13 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அவர் உறுதிபட அறிவித்தார். மகளிருக்கு அனைவருக்கும் மாதாந்திர உரிமை தொகையாக 1000 வழங்கப்படும். மேலும் பேருந்தில் இலவசமாக மகளிர் பயணிக்கலாம். போன்ற நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி எம்பி வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். பின்னர் திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் லட்சுமணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.