கண்டாச்சிபுரத்தில் அரசு அலுவலகங்கள் கேட்டு கலெக்டரிடம் மனு

கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு அடிப்படை அரசு அலுவலகங்கள் கேட்டு பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

Update: 2021-09-13 10:15 GMT

கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த கண்டாச்சிபுரம் பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு என்ற பெயரில் ஒன்று சேர்ந்து திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு 23 02 2016 அன்று கண்டாச்சிபுரத்தை புதிய வட்டமாக அறிவித்து, பிரிக்கப்பட்டு தற்போது வரை தனி வட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வரையில் வட்டத்திற்கு வட்டாட்சியர் அலுவலகம் தவிர்த்து மற்ற தேவையான அரசு அலுவலகங்கள் இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு அமைத்தது தரவில்லை. அதனால் உடனடியாக அனைத்து அடிப்படை அரசு அலுவலகங்களும் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

இதில் கண்டாச்சிபுரம் அனைத்து சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் கடந்த ஆறாம் தேதி கண்டாச்சிபுரத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணபதி தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News